"உயரும் நிலத்தடி நீர்மட்டம்" கை கொடுக்கும் கோவில் குளங்கள்..!

0 5345
"உயரும் நிலத்தடி நீர்மட்டம்" கை கொடுக்கும் கோவில் குளங்கள்..!

பருவ மழை காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் தீர்த்தக் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. பல கோவில் குளங்களும் நிரம்புவதால், நிலத்தடி நீர் மட்டம், அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு கோவில் குளங்களும் தண்ணீரால் நிரம்பி வருகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளம் நிரம்பி விட்டது. மயிலாபூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில் குளங்களும் கணிசமாக நிரம்பி வருகின்றன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் குளம், 5 ஆண்டுகளுக்குப்பின் தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால், இந்தாண்டு தீர்த்தவாரி திருவிழா நிச்சயம் கொண்டாடப் படும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நுங்கம்பாக்கம் கோவில் குளத்தில் நிரம்பி வழியும் அளவுக்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவில் குளத்தை தூர்வாரியதாலேயே இந்த ஆண்டு இந்தளவிற்கு மழை நீரை சேமிக்க முடிந்ததாக ஆலயத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கோவில் குளங்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான கோயில் குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

இவை அழகையும் , கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மனநிம்மதியையும் தருகின்றன. கோவில் குளங்கள் நிரம்பும் போது, சுற்று வட்டாரப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments